Friday, December 23, 2016

இலக்கியாவின் தம்பி

Edit Posted by with No comments
இலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், தம்பி என்றதும் tummy என்று நினைத்துத் தன் வயிற்றைக் காட்டுகிறார் அவ்வ்வ்...

Saturday, December 3, 2016

இலக்கியா டயறிக் குறிப்பு - 27 மாதங்கள்

Edit Posted by with No comments
இலக்கியாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. ஆனால் பாட்டுக் கேட்பதென்றால் ஏக குஷி. அன்றொரு நாள் ரம் பம் பம் ஆரம்பம் பாட்டு காரில் ஒலித்த போது பின்னிருக்கையில் இருந்து பாட்டின் ரிதத்துக்கேற்ப அபிநயம் பிடித்துக் காட்டினார் இருந்த இருப்பிலேயே. அத்தோடு தர்மதுரை படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா பாட்டைக் கேட்டால் மெதுவாக ஆரம்பித்துத் துள்ளலோடு ஆட்டம் நிறையும் 😀இலக்கியா இதுநாள் வரைக்கும்...

Tuesday, November 29, 2016

இலக்கியாவின் தீபாவளி

Edit Posted by with No comments
சிட்னி முருகன் ஆலயத்தில் தீபாவளிச் சிறப்புத் தரிசனம் இனிதே நிறைந்தது பூசை முடிந்ததும் இலக்கியா ய்யேஏஏஏஎ என்று சொல்லிக் கை தட்டினார்...

Tuesday, October 11, 2016

இலக்கியாவுக்கு ஏடு தொடக்கல் 📚

Edit Posted by with No comments
இந்த ஆண்டு விஜயதசமி நாளில் இலக்கியாவுக்கு ஏடு தொடக்கச் சொல்லி ஊரில் இருந்து இலக்கியாவின் அப்பம்மாவின் வேண்டுகோள் வந்தது.சிட்னியை ஆட்டிப் படைக்கும் வைரஸ் காய்ச்சலால் எங்கள் வீட்டில் மூவருமே மாறி மாறிப் பாதிக்கப்பட்டதால் எதையும் தீர்மானமாக முடிவெடுக்காத நிலையில் நேற்று முன் தினம்...

Saturday, September 10, 2016

இலக்கியாவின் முடியாட்சி 💇🏻

Edit Posted by with No comments
இருபத்து நான்கு மாதங்களுக்குப் பொதுவில் இன்று மூன்றாவது முறையாகத் தன் முடி துறந்தார் இலக்கியா. முடி துறத்தல் என்றால் மொட்டை ராஜேந்திரன் அளவுக்கெல்லாம் இல்லை. இலக்கியா பிறந்த நாள் தொட்டு எல்லா இந்து மதச் சடங்குக்கும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு ஆனால் "மொட்டை அடிக்காமல்" காது குத்துதல் என்ற நிபந்தனை மட்டும் விதிவிலக்காக :-)"பொம்பிளைப் பிள்ளை எண்டால் மொட்டை அடிக்கக் கூடாது பிள்ளை பாவம்" என்ற இலக்கியா...

Saturday, September 3, 2016

வன்னியில் கொண்டாடிய இலக்கியாவின் பிறந்த நாள்

Edit Posted by with No comments
இந்த முறையும் இலக்கியாவின் பிறந்த நாளை வன்னியில் இருக்கும் தன்னுடைய அண்ணன், அக்காமார்களுடன் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். கடந்த முதலாவது பிறந்த தினத்தை செஞ்சோலையில் இருக்கும் உறவுகளோடு மட்டுமே கொண்டாட முடிந்தது. இம்முறை குறைந்த பட்சம் இரண்டு இல்லங்களிலாவது...

இலக்கியாவின் இரண்டாவது பிறந்த நாளில்

Edit Posted by with 6 comments
இன்று இலக்கியா எங்களைப் புதிதாய்ப் பிறக்க வைத்து இரண்டு ஆண்டுகளைத் தொடுகிறது. எங்களுக்கெல்லாம் பத்து மாசம் அல்ல பல வருஷத் தவமாகக் கிடைத்தவள் எங்கள் அன்புச் செல்வம். விடிகாலையில் எழுந்து காலை சிட்னி முருகனிடமும், மல்கோவா மாதாவிடவும் போய்க் கும்பிட்டு விட்டு வந்திருக்கிறோம். இலக்கியா...

Wednesday, August 24, 2016

இலக்கியா குழப்படி

Edit Posted by with No comments
இலக்கியா குழப்படி செய்தால் கண்களைப் பொத்தி அழுவதைப் போல நடிப்பேன் இப்போதெல்லாம் அப்படிச் செய்தா என் முகத்தில் சாய்ந்து சமாதானம் செய்வாராம்...

Friday, August 19, 2016

"அப்பா"

Edit Posted by with No comments
முதல் தடவையாக இலக்கியா என்னை ஆசை தீர அழைத்த வார்த்தை.  "அப்பா அப்பா அப்பா" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் இன்று. இத்தனை நாளும் சொல்லாதைச் சொல்லிக் காட்ட வேண்ட வேண்டும் என்ற அவதி போல. வேலைக்கு வரும் அந்த விடிகாலை ரயிலில் சந்தடியில்லாத இடத்தின் இருக்கையில் இருந்து அழுது கொண்டே வந்தேன் இந்தப் பாட்டைக் கேட்ட படி. "இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி" https://ww...

Wednesday, August 3, 2016

இலக்கியா எங்களோடு 23 மாதங்கள் 🐇

Edit Posted by with No comments
நேற்று இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரவேண்டிய பொறுப்பு எனக்கு. சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவர், என்னைக் கண்டதும் "ம்மா" என்று உரக்கக் கத்திக் கொண்டே குறுகுறுவென்று ஓடி வந்தார். அள்ளித் தூக்கி உச்சி மோந்தேன். என் இடுப்பில் ஏறியவர் தூரத்தில் இருக்கும் பொருள் ஒன்றைக் காட்டித் தன் மழலைக் குரலில் ஏதோ சொன்னார். நானும் புரிந்தது போல ஆர்வமாகக் கேட்டுக் கொண்டே ஆமோதித்தேன்....

Saturday, July 30, 2016

தன்னைக் காணவில்லையாம் இலக்கியா 🍼

Edit Posted by with No comments
பக்கத்தில் படுத்திருந்து கொண்டு போர்வையால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தன்னைக் காணவில்லையாம் இலக்கியா...

Saturday, July 23, 2016

"பாப்ப பபபப்பா பாப்ப பபப்பா"

Edit Posted by with No comments
"பாப்ப பபபப்பா பாப்ப பபப்பா" எண்டு பாடிக் கொண்டு இருக்குது நம்ம சிறுமி இலக்கியா "ஜெர்மனியின் செந்தேன் மலரே" பாட்டைக் கேட்டுட்டாவ...

Tuesday, July 19, 2016

கண்களை மூடி ஈஈஈ

Edit Posted by with No comments
எங்க பழகின பழக்கமோ தெரியேல்லை கை விரல்களை மடிச்சிக் கொண்டு கண்களை மூடி ஈஈஈ என்று அழுது காட்டும் இலக்க...

Thursday, July 14, 2016

🐇நம்பிக்கை

Edit Posted by with No comments
நீட்டிய என் கைக்கு மேல் கிடந்து தான் இலக்கியா நித்திரை கொள்ளுவாராம் நம்பிக...

Saturday, June 18, 2016

🎸இசைத் தேனே

Edit Posted by with No comments
இசைத் தேனே இசைத்தேனே தேனே தென்பாண்டி மீனே தன் தொடையில் தாளம் போட்டுப் பாட்டுக் கேட்கும் இலக்கியா...

Monday, June 6, 2016

தண்ணீர் குழாயைப் பார்த்துப் பிள்ளையார்

Edit Posted by with No comments
தண்ணீர் குழாயைப் பார்த்துப் பிள்ளையார் என்று நினைத்துக் கும்பிடும் இலக்கியா...

Friday, June 3, 2016

இலக்கியா என்னும் கதை சொல்லி 📚

Edit Posted by with No comments
குழந்தையின் கையை வாங்கி மடிந்து கிடக்கும் விரல்களை விரித்து விட அது தொட்டாச் சிணுங்கி போல சுருங்கிக் கொள்ள, மீண்டும் அந்த விரல்களைப் படிய வைத்து விட்டு குழந்தையின் உள்ளங்கையில் என் முழங்கையால் உருட்டி "கீரை கடைஞ்சு கீரை கடைஞ்சு" சொல்லி விட்டு குழந்தைக்கும் அப்பா, அம்மா, எல்லோருக்கும்...

Saturday, May 14, 2016

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலக்கியா அப்பா :))

Edit Posted by with No comments
இலக்கியா தன் அப்பாவுக்குத் தந்தது...

Thursday, April 28, 2016

அப்பூ சாமி

Edit Posted by with No comments
அப்பூ சாமி பிள்ளையை வளர்த்து விடு என்று கும்பிட்டு இலக்கியாவுக்குத் திருநீறைப் பூசினால் எனக்கும் அதே மாதிரி ஆசீர்வாதம் கொடுக்கும் இலக்க...

Tuesday, March 22, 2016

இலக்கியாவின் கை

Edit Posted by with No comments
இலக்கியாவின் கையை ஒருத்தன் கடிச்சுட்டான் குற்றவாளியின் வயசு 18 மாசம் அவனுக்குத் தெரியாது இலக்கியா ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டுன...

Thursday, February 25, 2016

இலக்கியா என்ற காக்கைக் குஞ்சு

Edit Posted by with No comments
மெல்ல மெல்லத் தள்ளாடி எழுந்து, இருக்கவா நிக்கவா என்ற தோரணையில் தள்ளாட்டம் போட்டு எழுந்து நிற்பதையெல்லாம் கடந்து விட்டார் இலக்கியா. இப்போதெல்லாம் எழும்பும் போதே மகா விஷ்ணு கணக்காக இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு எழும்பி நடக்கும் கலையைக் கற்றுத் தேர்ந்து விட்டார். அதாவது "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" சிவகுமாரில் இருந்து இப்ப பில்லா "தல" நடை மாதிரி. இலக்கியா நடக்கும்...

Sunday, February 21, 2016

புல்லாங்குழலை ஊதி

Edit Posted by with No comments
நேற்று வீடு முழுக்க இசைக்கச்சேரி முழக்கம், வாயில் புல்லாங்குழலை வைத்து ஊதியவாறு மத்தாளத்துக்கு அடி கொடுத்த இலக்கியா...

"மாங்குயிலே பூங்குயிலே"

Edit Posted by with No comments
இளையராஜா ஆர்மோனியம் வாசித்து "மாங்குயிலே பூங்குயிலே" பாட அதைப் பார்த்துக் கொண்டே இலக்கியா துள்ளல்...

Saturday, February 20, 2016

இருமல் எடுத்த இலக்கியா

Edit Posted by with No comments
இருமல் எடுத்த இலக்கியாவின் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தினார் தாய் இலக்கியா இருமி விட்டு தன் முதுகைக் கையை வளைத்துத் தட்டப் பார்க்கிறார்...

Friday, February 19, 2016

"அக்கா"

Edit Posted by with No comments
இலக்கியா தன் சட்டையில் இருக்கும் இந்த உருவத்தைக் காட்டி "அக்கா"வாம்...

Wednesday, February 17, 2016

"பாட்டுப் பாடவா"

Edit Posted by with No comments
"பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா" பாடலின் தாள லயத்துக்கேற்ப தலையாட்டும் இலக்கியா #தலைமுறை கடந்த ...

Wednesday, February 3, 2016

இலக்கியா 🐿 மாதங்கள் 17

Edit Posted by with No comments
தனது 16 வது மாதத்தில் தான் இலக்கியா "அம்மா" என்ற வார்த்தையைப் பாவிக்கக் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பெல்லாம் "அம்மா சொல்லுங்கோ" என்று கேட்டால் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே சூழலைத் திருப்பி விடுவார். தன் தாயை ஏதோ ஆத்ம நண்பரோடு பழகுவது போலத்தான் இலக்கியாவுக்கும் அவரது தாய்க்குமான பந்தம். "ரச தந்திரம்" படத்தில் மோகன்லால் நாயனக்காரர் ஒடுவில் உன்னிகிருஷ்ணனோடு பேசும் போது ஒரு நையாண்டிச் சிரிப்பை...

Saturday, January 30, 2016

அழுது காட்டுது

Edit Posted by with No comments
முகத்தைக் கைகளால் மூடி அழுவதாகப் பாவனை செஞ்சு காட்டினால், தானும் அதே மாதிரி அழுது காட்டுது #இலக்கியா குழப்படி...