Wednesday, December 31, 2014

வீட்டுக்குள் மலர்ந்து வளரும் பூ

Edit Posted by with No comments
2014 ஆம் ஆண்டு எங்களுக்கு "இலக்கியா" என்ற மகாலட்சுமியைத் தந்தது பெரும்பேறு. குழந்தை, வீட்டுக்குள் மலர்ந்து வளரும் பூ என்பார் என் நண்பர்

Wednesday, December 24, 2014

Santa கொடுத்து வச்சது

Edit Posted by with No comments
Santa மடியில் இலக்கியா உட்கார்ந்து ஒரு போட்டோ என்று திட்டம் நீண்ட கியூவைக் கண்டு இலக்கியா பொறுமை இழப்பு Santa கொடுத்து வச்சது அவ்ளோ தான்

பாஷை தெரியாத பாப்பா

Edit Posted by with No comments
பாஷை தெரியாமல் மாட்டி சிரித்துச் சமாளிப்பது போலத்தான் நாம் பேச்சுக் கொடுக்கும் போது இந்தக் கைக்குழந்தையும் சிரித்துப் போக்குக் காட்டுகிறதோ நமக்கு?

Sunday, December 21, 2014

முதல் பிரமாண்டமான இரவு விருந்து

Edit Posted by with No comments
இன்று இலக்கியா கலந்து கொண்ட முதல் பிரமாண்டமான இரவு விருந்து நண்பரின் தாய், தந்தையின் 50 வது திருமண நிறைவு ஆண்டுக் கொண்டாட்டம்

Thursday, December 18, 2014

தந்தையைக் கவனிப்பாள் :-)

Edit Posted by with No comments
இலக்கியா அம்மா வைத்தியரிடம் போய்விட்டார் வழக்கமாக தாயிடம் இந்த நேரம் அடம் பிடிக்கும் மகள் அமைதியாக உறங்குகிறாள், தந்தையைக் கவனிப்பாள் :-)

Friday, December 12, 2014

முதன்முதலாக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு

Edit Posted by with No comments
இலக்கியா முதன்முதலாகத் தன் தாயுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் போகிறார்

Wednesday, December 3, 2014

நான் வளர்கிறேனே அப்பா - இலக்கியா பிறந்து இன்றோடு மூன்று மாதம்.

Edit Posted by with No comments

இலக்கியா பிறந்து மூன்று வாரங்கள் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருந்த காலங்களைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதையெல்லாம் தண்டி எங்கள் வீட்டுக்கு அவர் வந்த நாள் முதல் அவரின் படி நிலை வளர்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிறோம் நானும் இலக்கியா அம்மாவும்.

குழந்தையை நன்றாக இறுகத் துணியால் சுற்றிப் படுக்க வைத்தாலேயே நன்றாகத் தூங்குவார் என்று தாதிமார் சொல்லி வைத்தனர். ஆனால் இலக்கியாவுக்குத் தன்னைத் துணியால் சுற்றிக் கட்டுவது பிடிக்காது.
வில்லன் பாசறையில் கையிற்றால் பிணைக்கப்பட்ட கதாநாயகி உடம்பை அசைத்து அசைத்துக் கழற்றிச் சுழற்றி எறிவது போல இலக்கியாவிடம் மாட்டுப்பட்ட துணி

இலக்கியாவுக்குத் தலைமுடி அதிகம் சிலவேளை தன் கையால் முடியைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிப்பார் முடியைப் பிடித்த கையை எடுக்கத் தெரியாதாம்

இலக்கியாவைத் தூக்கி மடியில் இருத்தி வைத்து அவரோடு கதைக்கும் போது ஓ ஓ ஓ என்று இடைக்கிடை குரல் கொடுத்து ஆமோதிக்கிறார்;-)


தலையை எல்லாப் பக்கமும் பூமிப் பந்து போலச் சுழற்றிச் சுழற்றி வேடிக்கை பார்க்கிறார். கதை சொன்னால் உன்னிப்பாகக் கேட்கிறார். என் வாரிசு ஆச்சே

இலக்கியாவின் அம்மாவுக்குத் தான் 24 மணி நேரமும் இலக்கியாவைப் பார்க்கும் பொறுப்பு. அதனால் இலக்கியா தன் தாய் மீது கொண்டிருக்கும் நேசத்தையும் (பொறாமை எட்டிப் பார்த்தாலும்) பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இலக்கியா வளர்ந்த பிறகு அவரின் அம்மா செய்த பணிவிடைகளை எல்லாம் சொல்லி வைக்க வேண்டும்.

இலக்கியா பிறந்து அந்த மூன்று வாரங்கள் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருந்த சமயம் ஒருமுறை குழந்தையை ஏந்திக் கையில் வைத்திருந்தேன். முதன் முதலில் தன் பொக்கை வாயை விரித்துச் சிரித்த கணம் ஆனந்தத்தில் கண்கள் உடைப்பெடுத்துப் பெருகிவிட்டது எனக்கு அப்போது.
குழந்தை சிரித்தால் நரி வெருட்டுறதாம் என்று ஒரு சிலரும், கடவுளோட கதைக்கிறது என்று இன்னும் சிலரும் சொன்னார்கள்.

ஆனால் இரண்டு மாதங்களிலேயே எங்கள் முகம் பார்த்துச் சிரிக்கப் பழகிவிட்டார். எந்த நேரமும் இலக்கியா தனது அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். சில சமயம் அது சிரிப்போடு இருக்கும்.
எங்கள் வீட்டின் சுவரில் ஒட்டியிருக்கும் கண்டிய நடனம் என்ற நீண்ட சுவர்ச்சித்திரத்தைக் காணும் போது இவருக்கு ஏனோ குஷி பிறந்து விடும். அதைப் பார்த்துப் பார்த்துச் சிரிப்பார்.

தாய் யசோதையின் கையில் இருக்கும் கண்ணன் படத்தைக் கண்டால் வாயால் ஏதோ சொல்ல எத்தனிப்பது போல அபிநயம் பிடித்துப் பின்னர் அந்தப் படத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்.

அத்தனை பெருந்துன்பங்களையும் துடைத்து எறிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் மென் சிரிப்பு.