முதல் தடவையாக இலக்கியா என்னை ஆசை தீர அழைத்த வார்த்தை.
"அப்பா அப்பா அப்பா" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் இன்று. இத்தனை நாளும் சொல்லாதைச் சொல்லிக் காட்ட வேண்ட வேண்டும் என்ற அவதி போல.
வேலைக்கு வரும் அந்த விடிகாலை ரயிலில் சந்தடியில்லாத இடத்தின் இருக்கையில் இருந்து அழுது கொண்டே வந்தேன் இந்தப் பாட்டைக் கேட்ட படி.
"இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி"
https://ww...
நேற்று இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரவேண்டிய பொறுப்பு எனக்கு. சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவர், என்னைக் கண்டதும் "ம்மா" என்று உரக்கக் கத்திக் கொண்டே குறுகுறுவென்று ஓடி வந்தார். அள்ளித் தூக்கி உச்சி மோந்தேன். என் இடுப்பில் ஏறியவர் தூரத்தில் இருக்கும் பொருள் ஒன்றைக் காட்டித் தன் மழலைக் குரலில் ஏதோ சொன்னார். நானும் புரிந்தது போல ஆர்வமாகக் கேட்டுக் கொண்டே ஆமோதித்தேன்....