எந்த விதப் பிடிமானமும் இன்றித் தானே எழுந்து நிற்கப் பார்த்து "தொம்" என்று கீழே விழுந்து விட்டு எனக்கு வலிக்கலையே, எனக்கு வலிக்கலையே என்குமாற் போலக் குலுங்கிச் சிரித்து விட்டு மீண்டும் எழுந்து நிற்கும் பயிற்சி. இதைப் பார்க்கும் போது சலங்கை ஒலி படத்தின் கமலஹாசன் நிறை போதையில் கிணற்றுக் கட்டிலில் "தகத ததிமி தந்தானா" போடுவது போல இருக்கும்.
அப்பா வெளிக்கிட்டு நல்ல உடை உடுத்தினால் வெளியே போகப் போகிறார்...