தூளியிலே ஆட வந்த இலக்கியா
இலக்கியாவின் பிறந்த நாள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வோடு ஒரு இசை ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்றதொரு இலட்சியம் எனக்குள் இருந்தது.
காரணம் என் சந்தோஷத்திலும், சோகத்திலும் இளையராஜாவே வழித்துணையாகவே வந்து கொண்டிருக்கிறார். ராஜாவின் பாடல்கள் இல்லாத ஒரு சூழல் எனக்கு வாய்த்திருந்தால் நான் இருந்திருப்பேனோ தெரியாது.
பிறந்த நாள் மண்டபத்துக்கு நுழையும் போதே "ஆயிரம் மலர்களே மலருங்கள்"...